Times of Puducherry
புதுச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது, கடற்கரையில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் பங்கேற்றார்.
புதுச்சேரியில் கடந்த 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி புதுச்சேரி மாநிலம் முழுதும் ஆங்காங்கே இளைஞர்கள் சார்பில் 2 அடி முதல் 20 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் பிரதிஷ்ட செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுச்சேரி
மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிரஷ்டை செய்யப்பட்ட
200-க்கும் விநாயகர் சிலைகள் ராஜா தியேட்டர் கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் தாரை தப்பட்டை ஆட்டம் பாட்டத்துடன் கடற்கரை பழைய நீதிமன்றத்திற்கு எதிரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
சிலைகளை கரைப்பதற்கு கடற்கரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் மகா ஆரத்தி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பிள்ளையார் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து ராட்சத கிரன்கள் மூலம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது, இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் முன்னாள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் இந்து முன்னணி நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.