Times of Puducherry
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீனா ஷாங்காயில் நடைபெற்ற உலக திறன் போட்டியில் (World Skills-2026) வெள்ளி பதக்கம் வென்ற முகம்மதுசலாம் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
திறன்களின் ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படும் உலக திறன் போட்டிகளில் தொழில் மற்றும் தொழில் நுட்ப திறன் பிரிவுகளில் உலகின் உயரிய சர்வதேச போட்டியாக கருதப்படுகின்றனர். இரண்டாடுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகளில் உலகெங்கிலும் உள்ள திறன்மிக்க இளைஞர்கள் தங்களது திறமைகளை சர்வதேச அளவில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
22.09.2026 முதல் 27.09.2026 வரை ஷாங்காயில் நடைபெற்ற World Skills-2026 போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 12 போட்டியாளர்கள் பல்வேறு திறன் பிரிவுகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றனர். இத்திறன் பிரிவு போட்டியில் 1 வெள்ளி பதக்கமும் 4 Medals of Excellence விருதுகளையும் தமிழ்நாடு வென்றது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பல்மருத்துவர் திரு.முகம்மதுசலாம் அவர்கள் உலக திறன் போட்டியில் Dental prosthetics பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
2022 முதல் தொடங்கப்பட்ட சர்வதேச திறன் போட்டி பயணத்தில் தமிழ்நாடு வென்ற முதல் வெள்ளி பதக்கமும் இதுவாகும். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திறன் மிக்க போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில் திரு.முகம்மதுசலாம் அவர்கள் தனது தொழில்திறன், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றி கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாகவும் திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்துள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.