Times of Puducherry
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று செயல்படுவதாகவும் நீங்கள் தான் பில்கேட்ஸ் நீங்கள்தான் அமெரிக்க ஜனாதிபதி என்று சொன்னாலும் அதனை நம்பும் மனநிலையில் அவர் இருப்பதாக என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்:
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு என்கின்ற குப்பசாமி சுய விளம்பரத்திற்காகவும் அரசியல் தேர்தல் விளம்பரத்திற்காகவும் சட்டமன்ற உறுப்பினர் என்ற மாண்பை மீறி சட்டத்தை மீறி பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்.
நேற்றய போராட்டத்தின் போது முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் மல்லாட கிருஷ்ணராவ் ஆகியோரை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். ரவுடிகளை கூட்டமாக அழைத்துக் சென்று பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார் என்று குற்றம் சாட்டிய வையாபுரி மணிகண்டன். பாரம்பரியமிக்க சட்டமன்றம் எப்போதெல்லாம் நேரு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அப்போதெல்லாம் சட்டமன்றம் மாண்பை இழந்து நிற்கிறது என்று கவலை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் சம்பந்தப்பட்ட சிசிடிவி கட்சிகளை பார்க்காமல் விசாரிக்காமல் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று நேரு நடந்து கொண்டதாக கடுமையாக விமர்சித்ததுடன் தனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார். ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அதிகப்படியான மக்கள் நலத்திட்டங்களை தொகுதிக்கு கொண்டு சென்றவர் நேரு என்கிற குப்புசாமி தான் ஆனால் அந்த நன்றி கூட இல்லாமல் முதலமைச்சரை விமர்சிக்கிறார் என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் நேரு கோபத்தில் நிதானத்தை இழந்து பேசுவதாகவும், அவரைப் பார்த்து நீங்கள் தான் பில்கேட்ஸ், நீங்கள் தான் அமெரிக்க அதிபர் என்று சொன்னாலும் அதனை நம்பும் மனநிலையில் நேரு இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், அமைச்சர் என்று கூட பார்க்காமல் மல்லாடி கிருஷ்ணராவை அடிக்க பாய்ந்திருக்கிறார். நியாயமாக அவர் மீது கொலை முயற்சி வழக்கு தான் பதிவு செய்திருக்க வேண்டும், ஜால்ரா தட்டுபவர்களின் பேச்சைக் கேட்காமல் தன்னுடைய வயதுக்கு உட்பட்டு அவர் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திய வையாபுரி மணிகண்டன். அப்படி இல்லை என்றால் அவருடைய பாணியிலேயே அவருக்கு என் ஆர் காங்கிரஸ் திருப்பி கொடுக்கும் என்றும் எச்சரித்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் உள்துறை அமைச்சர் இல்லை என்று தெரிந்த பின்பும் அவர் போராட்டம் செய்வது இடைத்தேர்தல் லாபத்திற்காக தான் என்றும் தோல்வியின் பயத்தில் ஏதாவது கூறி வென்றுவிடலாம் என்று நினைப்பதாகவும் வையாபுரி மணிகண்டன் விமர்சித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.