Times of Puducherry
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (02.10.2026 முதல் 21.10.2026 வரை) பொதுமக்கள் வெளியூர்களுக்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக புகார் பெறப்பட்டு வருகிறது.
மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள், மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழக சாலை வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் பிற மாநில வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் மற்றும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு கீழ்காணும் தொலைபேசி எண் வாயிலாக தொலைப்பேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்க வேண்டப்படுகிறது.
தொலைபேசி எண்: 9384808333 / 1800 425 6151 / புகார் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: tc.tn@nic.in
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.