Times of Puducherry

SPINCO சொத்துகள் சட்டரீதியாக மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டி கோரிக்கை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 10:37 PM
spinco land-recover-demand-saisaravanan

புதுச்சேரி திருபுவனை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாண்டார்கோவிலில் அமைந்துள்ள SPINCO நூற்பாலைக்குச் சொந்தமான சொத்துகள் உரிய சட்ட விதிமுறைகளின்படி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். திருபுவனே தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏசாய் சரவணன் தெரிவித்துள்ளார்

சட்டவிரோதமாகவோ அல்லது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு முரணாகவோ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தால், அவற்றை சட்டப்படி ரத்து செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட சொத்துகளை தனியார் தரப்பினரிடமிருந்து சட்டரீதியாக மீட்டு, அவற்றை பொதுமக்களின் நலன் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக பயன்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களிடம் திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் A.K. சாய் ஜெ. சரவணன் குமார் கோரிக்கை கடிதம் வழங்கினார்.

இக்கோரிக்கையின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத பட்சத்தில், தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகக் கண்டறியப்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top