Times of Puducherry

சிவாஜி கணேசனின் 99-வது பிறந்த நாள்: திருச்சி காங்கிரஸ் சார்பில் மரியாதை

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
1 Oct 2026 • 3:21 PM
trichy congress garland sivaji kanesan satatue 99th birthday

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான எல்.ரெக்ஸ் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆராய்ச்சி பிரிவு மாநில பொதுசெயலாளர் பெஞ்சமின் இளங்கோ, கோட்ட தலைவர்கள் காட்டூர் ராஜா டேனியல் ராய், புத்தூர் மலர் வெங்கடேஷ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், உறையூர் பாக்யராஜ், அரியமங்களம் அழகர், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஏர்போர்ட் கனகராஜ், பஞ்சப்பூர் மணிவேல், தில்லைநகர் ராகவேந்திரன், மாணவர் காங்கிரஸ் நரேன், ஐடி பிரிவு கிளமென்ட், வார்டு நிர்வாகிகள் பாண்டியன், கண்ணன், ஷாஹுல் அமீது சிவாஜி மன்ற நிர்வாகிகள் சீனிவாசன், ராஜா, சிவாஜி பெரியதம்பி, மாதவன் மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

செய்தி: திருச்சி ஷ்யாம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top