Times of Puducherry

விழுப்புரத்தில் அகழாய்வுப் பணிகள்: நேரில் பார்வையிட்ட அரசுப் பள்ளி மாணவிகள்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
12 Sep 2026 • 10:08 PM

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், வசந்த கிருஷணாபுரம் மற்றும் ஆதிச்சனூரில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அகழ்வாய்வில் கல்வட்டத்தில் சங்குகள் கோர்வைவயாகக் காணப்பட்டன இது இந்தியா அளவில் முதன் முதலாகக் கண்டெடுக்கப்பட்டதாகும். இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அகழாய்வுத் தளத்த்தினை மாணவர்கள் பார்த்து வரலாற்றின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், வசந்த கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றுவரும் அகழாய்வுப்பணியினை , திருவெண்ணை நல்லுர் வட்டம் சித்தலிங்க மடம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில் பார்வையிட்டனர். வசந்த கிருஷ்ணாபுரம் மற்றும் ஆதிச்சனுார் அகழாய்வு திட்ட இயக்குனர் பொ. கோ. லோகநாதன், அப்பகுதியில் மேற்கொண்டுவரும் ஆய்வுப்பணிகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கினார்.

குறிப்பாக இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, 9 கல்வட்டங்கள் மற்றும் ஈமப்பேழை, எலும்புகள், சங்குவரிசைகள் ஆகியவற்றையும் அதனுடைய காலங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதில் 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர் கோ. கலா மாணவிகளை ஒருங்கிணைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் நிர்வாகிகள் பா. கார்த்திகேயன், புலவர் திருஞானம், சு. சங்கர், கவிநிலவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top