Times of Puducherry

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
16 Sep 2026 • 9:57 AM

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு

மனு தாக்கல் கடந்த 9.9.26 தொடங்கியது. இன்று (16.9.26) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை தினம் ஆகும். நேற்று (15.9.26) நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை ஒருவர் என 2 பேர் மனு தாக்கல் செய்தனர். முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர். தேஜகூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் இன்று காலை கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலில் சாமி கும்பிட்டு முதல்வர் ரங்கசாமி பூஜித்து தரும் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு அங்கிருந்து முதல்வர், பாஜக தலைவர், அதிமுக மாநில செயலாளர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு

மனு தாக்கல் செய்ய உள்ளார்.

திமுக வேட்பாளர் செதுசெல்வம் தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா ஆகியோருடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக காலை 10.30 மணியளவில் தட்டாஞ்சாவடி எஸ்டேட்டில் திமுகவினர் ஒன்று கூடி அங்கிருந்து தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் ஊர்வலமாக செல்ல உள்ளனர். அதுபோல் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் காலை 10.00 மணியளவில்,தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் (மார்க்கெட்டிங் கமிட்டி) அருகிலிருந்து தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் காங்கிரசார் ஊர்வலமாகப் புறப்பட்டு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் கொக்குபார்க் அருகில் கட்சியினருடன் ஊர்வலமாக சென்று காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

மேலும் போட்டியிட விரும்பும் பல்வேறுகட்சியினரும், சுயேட்சைகளும் இறுதி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்வர். இன்று

காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுக்கள் வாங்கப்படும். எனவே இன்று முருகா தியேட்டர் சந்திப்பில் இருந்து திண்டிவனம் சாலை வழியாக கோரிமேடுவரை செல்பவர்களும், வழுதாவூர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் வரை செல்பவர்களும்

மாற்றுப்பாதையை பயன்படுத்துவது நல்லது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top