Times of Puducherry

நீட் தேர்வில் சாதனை படைத்த வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 6:16 PM
v o c school

புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. 2024-2025-ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர் ஹரிஷ் மற்றும் 2025-2026-ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர் பிரஷன் ஆகிய இருவரும் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி (MBBS) பயில இடம் பெற்றுள்ளனர். மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் பள்ளியின் துணை முதல்வர் சிவராமரெட்டி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பள்ளி விரிவுரையாளர்கள் நற்சோனை, சாமுண்டீஸ்வரி, கீதப்பிரியா, டேவிட் பால், பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி,
நித்தியானந்தம், உடற்கல்வி விரிவுரையாளர் ரவிக்குமார், நூலகர் செந்தில் குமார், நுண்கலை ஆசிரியர் முருகேசபாரதி, மற்றும் ஆசிரியைகள் பாமா, பிரேமா, ஹேமலட்சுமி, சண்முகப்பிரியா உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டி வாழ்த்தினர்.

சாதனை படைத்த மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மருத்துவக் கோட் ஸ்டெதாஸ்கோப் மற்றும் கைக்கடிகாரம் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top