Times of Puducherry

பாதுகாப்பு வீரரை தாக்கிய சுற்றுலாப் பயணி: புதுச்சேரியில் பரபரப்பு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
12 Sep 2026 • 10:16 PM

புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக இருந்து வருகிறது. 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெளிமாநில சுற்றுலாப் பயணி ஒருவர் புதுச்சேரி கடற்கரையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் மது போதையில் இருந்ததாகவும், அதனால், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மது பாட்டிலுடன் கடலில் இறங்கி குளிக்கச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் கடலில் சென்று மது அருந்தக்கூடாது எனத் தடுத்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு வீரர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா வந்த பயணிகள் பாதுகாப்பு வீரரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் கடலோர பாதுகாப்பு வீரரை சரமாரியாக தாக்கிய சுற்றுலா பயணிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top