Times of Puducherry

புதுச்சேரியில் உலக சுற்றுலா தினம்: கோலாகல கொண்டாட்டம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 7:40 AM
tourism day

புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை சார்பில் செப்டம்பர் மாதம் 27 உலக சுற்றுலா தினம் புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும்
கொண்டாடப்படவுள்ளது. இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் ஓவியக் கலைவிழா 26.09.2026 சனிக்கிழமை அன்று காலை
காலை 8.00 மணிக்கு புதுச்சேரி, பாரதி பூங்காவில் நடைபெறவுள்ளது.

இக்கலைவிழாவில், பள்ளி, கல்லூரி, நுண்கலை பயிலும் மாணவர்கள் பின்வரும் அடிப்படையில் கலந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள் புதுச்சேரியில் “எனது புதுச்சேரி எனது பெருமை புதுச்சேரியின் அறியப்படாத
சுற்றுலா வளங்கள் புதுச்சேரியின் வண்ணங்கள் என் பார்வையில் புதுச்சேரி புதுச்சேரியில் ஒரு நாள் புதுச்சேரியின் அழகிய
கடற்கரையும், வரலாற்றுப் பாரம்பரியமும்நமது கடற்கரை, நமது பாரம்பரியம் அறியப்படாத புதுச்சேரியை அறிவோம்”

முதல் பிரிவு (6-முதல் 8-ஆம் வகுப்பு வரை), இரண்டாம் பிரிவு (9-முதல் 10-ஆம் வகுப்பு வரை), மூன்றாம் பிரிவு (11-முதல் 12-ஆம் வகுப்பு வரை) பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து போட்டியில் பங்கேற்கலாம்

கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள் “புதுச்சேரி குடியிருப்பும் கலாச்சாரங்களின் சங்கமம் பிரெஞ்சு பகுதியும் தமிழ் ஓர் ஒப்பீடு / புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தொன்மையான பாரம்பரியம் / நான்கு பிராந்தியங்கள் ஒரே சுற்றுலா அடையாளம் / கடற்கரை சாலைக்கு அப்பால் புதுச்சேரி/ புதுச்சேரி சுற்றுலாவும் இயற்கை நிலைத்தன்மையும் / புதுச்சேரியின் உயிரோட்டம்” பங்கேற்கும் கல்லூரி நுண்கலை மாணவர்கள் மேற்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து போட்டியில் பங்கேற்கலாம்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top