Times of Puducherry
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் விநாயக சதுர்த்தி விழா முன்னிட்டு சொர்ண கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க மற்றும் வெள்ளிக்கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலயத்திற்கு சொந்தமான பிரணாம்பிகை யானைக்கு கஜ பூஜை செய்து புத்தாடை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கஜ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் மற்றும் பிரணாம்பிகை யானையிடம் தரிசித்து அருள்பெற்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.