Times of Puducherry
விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் கடலூரில் திருமண நிகழ்வில ஒன்றில் பங்கேற்று விட்டு தொடர்ந்து கடலூரில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, திமுக ஆட்சியில் விடுதலை சிறுத்தைகளின் வேண்டுகோளை அடுத்து திமுக அரசு பெரியார் பிறந்தநாளை சமூக நிதி நாளாகவும் , புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்ததை அறிவோம் அந்த வகையில் சமூக நிதி நாளான இன்று இந்த மண்ணில் சமூக நீதியை பாதுகாக்கவும் சமத்துவத்தை வென்றெடுக்கவும் விடுதலை சிறுத்தைகள் உறுதியா இருக்கிறோம் என்றார்.
தேமுதிக பிரேமலதா அவர்கள் நாங்கள் தேமுதிக விமர்சித்ததாக எண்ணிக் கொண்டு கருத்துக்களை கூறியிருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறுவது வெளியேறினார்கள் பதவி ஆசை மட்டுமே காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர் துரோக பட்டங்களையும் சூட்டி வருகின்றனர் அவர்களுக்கு விடை அளிக்கும் வகையில் நான் திருமண விழாவில் ஒன்றில் பேசும்பொழுது அது மட்டும் தான் காரணமா திமுகவுக்கும் அன்றைக்கு கூட்டணியாக இருந்த கட்சிகளுக்கு உடனான உறவு எத்தயதாக இருந்தது என்பதையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டாமா என்று கோணத்தில் கருத்துக்களை சொன்னேன் அப்படி காரணங்களை அடுக்குகின்ற பொழுது திடீரென்று தேமுதிகவை கூட்டணியில் சேர்த்ததும் அதற்கு இடங்கள் 10 இடங்கள் வழங்கப்பட்டது குறித்தும் கூட்டணி கட்சிகளுக்கு கசப்பு இருக்காதா என்று கோணத்தில் கேள்வி எழுப்பினேன். அவ்வளவுதான் ஆனால் தேர்வு தேமுதிகவிற்கு 10 இடங்கள் கொடுத்தது முழு மனதாக வரவேற்று அதற்கு காரணங்களின் விலக்கியது தான் என்றும் பலரும் அந்த நேரத்தில் தேமுதிகவை திமுகவுக்குள்ளே இணைத்துக் கொண்டதை சமூக வலைதளங்களில் விமர்சித்தது அனைவருக்கும் தெரியும்
ஆனால் அதனை வரவேற்றவர் நான்தான் என்றும் என்றைக்கு நான் அவர்களை சேர்த்தீர்கள் என்று எதற்காக அவர்களை இத்தனை சீட்டு கொடுத்தீர்கள் என்ற கோணத்தில் தான் எந்த கருத்தையும் சொல்லவில்லை என்றும் உடனிருந்த கட்சிகளுக்கு திமுகவோடு இருந்த உறவு பாதிக்கப்படுவதற்கு பல காரணிகள் உண்டு என்று நான் காரணங்களை நான் அடுக்கிய பொழுது தேமுதிகவையும் திமுகவுக்கும் இணைத்தது ஒரு காரணம் என்ற கோணத்தில் கருத்தை சொன்னேன் ஆனால் அவர் நாங்கள் ஏதோ தேமுதிக மீது காழ்ப்புணர்வு கொண்டு விமர்சிக்கிறோம் என்ற கோணத்தில் அவர் கருத்து சொல்கிறார் அவருடைய கருத்து அவருடைய கருத்தாகவே இருக்கட்டும் அதில் தான் மேற்கொண்டு கருத்து சொல்ல விரும்பவில்லை.
இப்போதைக்கு, இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் பணிகள் இருக்கும் என்றார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.