Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள சிவகவி ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், பாமக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் ஆனந்தன் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அசோக் ஆனந்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார். மேலும், அசோக் ஆனந்தன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். தொடர்ந்து தேர்தல் பிரசாரம், கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு, பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.