Times of Puducherry

தட்டாஞ்சாவடி தொகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்கப்படும் - அசோக் ஆனந்தன்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 1:09 PM
campaign

தட்டாஞ்சாவடி தொகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்கப்படுவதன் மூலம் தொகுதியில் ஏற்படவுள்ள வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் அவ்வை நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவ்வை நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்ற அசோக் ஆனந்தன், சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், தொழில் நிறுவனங்கள் வருகையால் வணிகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மேலும், தொகுதி படிப்படியாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
தொகுதியின் நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் ரங்கசாமியின் தலைமையில் தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்த அசோக் ஆனந்தன், பொதுமக்களின் ஆதரவை கேட்டுக்கொண்டார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top