Times of Puducherry
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆசிபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் கு. சேது (எ) சேதுசெல்வம் தீவிர வாக்கு சேகரிக்கும் பணிக்காக தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள 31 பூத்களுக்கும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, பொருளாளர் இரா. செந்தில்குமார் எம்.எல்.ஏ., ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக வேட்பாளர் கு. சேது (எ) சேதுசெல்வம் வரவேற்று பேசினார். பூத் கமிட்டி நிர்வாகிகள் அவரவர் வாக்குச்சாவடியில் எவ்வாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, திமுக வேட்பாளரின் வெற்றிக்கு எப்படி பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.