Times of Puducherry
புதுச்சேரி மாவட்டத்தின் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற 06.10.2026 அன்று நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளான 06.10.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்தார். வாணிபம், வியாபாரம். தொழில் நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு நபர்களுக்கும் மக்களவை அல்லது சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க உரிமை பெற்றவராக இருப்பின் அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுதல் வேண்டும் சம்பள பிடித்தமோ அல்லது சம்பள குறைப்போ செய்தல் கூடாது மேலும் பணிபுரியும் நபர் அந்த நாளுக்கான சம்பளம் பெறாதவராக பணியமர்த்தப்பட்டிருந்தாலும் கூட அவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் இதன்படி, மேற்கண்ட இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தட்டாஞ்சாவடி தொகுதியை சார்ந்த வாக்காளர்களுக்கு, 06.10.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
இந்த விடுமுறை காரணமாக எந்தவொரு பணியாளரின் ஊதியத்திலும் எந்தவிதக் பிடித்தமும் செய்யக்கூடாது. மேலும், தினக்கூலி மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள், சுழற்சி முறையில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட தகுதியுடைய அனைத்து வாக்காளர்களுக்கும் இவ்விதிமுறை பொருந்தும். மேலும், தேர்தல் நடைபெறும் தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வேறு தொகுதியில் பணிபுரிந்தாலும், அவர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, இச்சட்ட விதிகளின்படி உரிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக ஏதேனும் விதிமீறல் இருக்குமேயானால் சட்டப்பிரிவு தண்டனைக்குரிய குற்றமாகும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.