Times of Puducherry
திமுக தலைமைக் கழகப் பொறுப்பாளர் ஜகத்ரட்சகன் எம்.பி. மற்றும் புதுச்சேரி மாநில திமுக தலைவர் ஆர். சிவா ஆகியோர் மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் G.R. சந்திரமோகனை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைமைக் கழகப் பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத்ரட்சகன் மற்றும் புதுச்சேரி மாநில திமுக தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். சிவா ஆகியோர் மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் . சந்திரமோகனை இல்லத்தில் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பாக கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கூட்டணியின் நல்லுறவு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.