Times of Puducherry
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, ராஜாஜி நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் அசோக் ஆனந்தன் வீடு வீடாகச் சென்று பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ராஜாஜி நகர் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் நடந்து சென்ற அசோக் ஆனந்தன், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர்களை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, தட்டாஞ்சாவடி தொகுதியின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட தேவைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். குறிப்பாக, அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து அசோக் ஆனந்தனிடம் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கவனமாக கேட்ட அவர், சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கோரப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை விரைவில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும், பொதுமக்களுடன் தொடர்ந்து நேரடியாக தொடர்பில் இருந்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதே தனது முக்கிய நோக்கம் என அசோக் ஆனந்தன் தெரிவித்தார். தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கு பொதுமக்களின் ஆதரவு தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அப்போது அசோக் ஆனந்தனை வரவேற்ற ராஜாஜி நகர் பகுதி வாக்காளர்கள், அவரது கடந்தகால சமூக சேவைகள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் செய்த பல்வேறு உதவிகளை நினைவுகூர்ந்து பாராட்டு தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.