Times of Puducherry
காவல்துறை ரயில்வே பாதுகாப்பு துறை அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்புடன் உரிய நேரத்தில் உளவுத்தகவல்களை தெரிவிக்க வேண்டும் . தமிழ்நாடு காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னையில் நடந்தது. இன்று நடந்த கூட்டத்திற்கு காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) தலைமை இயக்குநர் த சோனாலி மிஸ்ரா, ரயில்வே பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகள் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பது, உளவுத்தகவல் பகிர்வு மற்றும் ரயில்வே பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கவும் எதிர்கொள்ளவும், இரு அமைப்புகளுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்புடன் உரிய நேரத்தில் உளவுத்தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் அவசியம் என்று முடிவு எடுக்கப்பட்டது
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.