Times of Puducherry
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும்படி தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டர்மான குலோத்துங்கன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தேர்தல் 07.09.2026 (திங்கட்கிழமை) அன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, வருகின்ற 06.10.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வருகின்ற 06.10.2026 அன்று காலை 07,00 மணி முதல் மாலை 06.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகவே, தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியின் அனைத்து தகுதியான வாக்காளர்களும், மேலே குறிப்பிட்டுள்ள நாளில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களது வாக்குரிமையைப் தவறாமல் பயன்படுத்துமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.