Times of Puducherry
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழக அரசு அமைந்த பின் பல அதிகாரிகளின் துறைகள் மாற்றப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக உள்ள ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி டீக்கா ராமன் தலைமையிலான தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில் அவரது நியமனம் நடந்துள்ளது.
மேலும் ஆணையத்தின் புதிய உறுப்பினராக மின் பகிர்மான கழக முன்னாள் இயக்குனர் ஏ.ஆர்.மாஸ்கர்னஸ் மற்றும் சட்ட உறுப்பினராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முத்து சாரதா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ராதாகிருஷ்ணன், மின்வாரிய தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.