Times of Puducherry
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை கிராமத்தில் உள்ள நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது . இக்கோவிலில் கடந்த 1 ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் 2 அடி உயரமுள்ள மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, உடனடியாக சித்தாமூர் காவல் நிலைய குற்ற எண்.245/2026 u/s 331(4), 305(d) BNS – ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மேற்பார்வையில், மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் 6 காவல் ஆய்வாளர்களை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை செய்து வந்தனர் . 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், வழக்கமாக இவ்வகையான குற்ற செயல்களில் ஈடுபடும் பழைய பழங்குற்றவாளிகளை விசாரித்து அடையாளம் கண்டு சித்தாமூர் காவல் ஆய்வாளர்
மகாலிங்கம் தலைமையில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை மீட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் சட்டப்படியான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், முனைவர் மகேஷ் குமார் அகர்வால், காவல்துறை தலைமை இயக்குநர் தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை வெகுவாக பாராட்டினார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.