Times of Puducherry

திமுக முப்பெரும் விழா - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 11:21 PM
stalin

கொளத்தூர் மக்களுக்கு எனது கோடான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஏன் என்றால் இன்றைய நிலையில் சட்டமன்றத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு. த வெ கா ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்கு தான் போட்டி ஒன்று மின்வெட்டு இன்னொன்று அரிவாள் வெட்டு. நமக்கு யார் எதிரி என்று நன்கு கணித்து பணியாற்றி இருந்திருந்தால் இந்த சட்டமன்ற தோல்வியே ஏற்பட்டு இருக்காது. அதற்காக நாம் அமைதியாக இருக்கப் போவது இல்லை ; நாங்க வட்டியும் முதலும் ஆக திருப்பி கொடுக்க காத்திருக்கின்றோம். சீக்கிரமாகவே வருவோம்,  திமிர் தனத்திற்கும் ஆணவத்திற்கும் சரியான பாடம் புகட்ட தான் இந்த தேர்தல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்திற்கு ஏதோ பெரிய அலை அடித்த மாதிரியும் தமிழ்நாடு அவர்களின் வருகைக்காக காத்திருந்த மாதிரியான ஒரு பில்டப் பண்ணிக் கொண்டிருக்கிறது. உண்மையில் அவர்கள் ஆட்சியை நடப்பது எப்படி என்றால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மக்கள் முன்னிலையில் தினமும் முதல்வர் விஜய் நடித்துக் கொண்டு இருப்பது போன்று இருக்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top