Times of Puducherry
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அன்னிச்சங்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்தகாரை வழிமறித்து சோதனை செய்ததில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த மோகன் (வயது 32) என்பதும், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.