Times of Puducherry
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) சார்பில் மாநில அளவிலான குறும்படப் போட்டி நடத்தப்படுகிறது. இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கமாகும்.
பெண்களின் பாதுகாப்பில் ஆண்களின் பங்கு, பார்வையாளரின் (Bystander) தலையீடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் சமூகத்தின் பங்கு பங்கேற்பு வழிமுறைகள் குறும்படங்கள் தமிழில் இருக்க வேண்டும்.அதிகபட்சம் 2 நிமிடங்கள், தனிநபராகவோ அல்லது அதிகபட்சம் 5 பேர் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம். Bonafide Certificate மற்றும் பதிவு படிவத்துடன் படைப்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும். படைப்புகளைச் சமர்பிக்க: https://bit.ly/SSF படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10.10.2026 ஆகும்.
முதல் பரிசு – ₹50,000, இரண்டாம் பரிசு – ₹25,000 மூன்றாம் பரிசு – ₹15,000 தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்று, தங்களது படைப்பாற்றல் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.