Times of Puducherry

தொழிலாளர் துறைக்கு தனியாக ஆணையரை நியமிக்க வேண்டும்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
11 Sep 2026 • 10:12 PM

தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுக்குழு கூட்டம் 11.9.2026 முதல் 13.9.2026 வரை பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தில் AIUTUC புதுச்சேரி மாநில செயலாளரும் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினருமான சிவக்குமார் கலந்து கொண்டு புதுச்சேரி தொழில் மற்றும் தொழிலாளர் நிலைமைகள் குறித்து பேசினார். புதுச்சேரி N.R. காங்கிரஸ் _ பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மூடப்பட்ட பஞ்சாலைகள், கூட்டுறவு நூற்பாலை, கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு துறை நிறுவனங்களை மீண்டும் திறந்து நடத்துவதற்கு‌ எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தால் தொழிலாளர் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து பலமுறை புகார்கள் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொழிலாளர் துறைக்கு தனியாக ஆணையர் நியமிக்காததால் அதிகாரிகள் வேலை செய்வதில்லை. புதுச்சேரி அரசு உடனடியாக தொழிலாளர் துறைக்கு தனியாக ஆணையரை நியமிக்க வேண்டும். தொழிலாளர் துறையில் உள்ள 70-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் . தொழிலாளர் துறையில் 3 ஆண்டுகளுக்கும மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்!. மாதாந்திர குறை தீர்வு கூட்டம் நடத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் கோரிக்கைகள் குறித்து பேசினார். ‌‌.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top