Times of Puducherry
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் குடி தண்ணீரில் அதிக அளவு டிடிஎஸ் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்தவே முடியவில்லை, உடனடியாக அப்பகுதியில் அரசு சார்பில் ஆரோ வாட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என டாக்டர் K. நாராயணசாமி எம்.எல்.ஏ., இன்று முதலமைச்சரிடம் மனு கொடுத்தார் அந்த மனுவில் உழவர்கரை தொகுதிக்குட்பட்ட SMS நகர், ஸ்ரீ சிவசக்தி நகர், வயல்வெளி நகர் மற்றும் லூயிஸ் ரெட்டியார் தோட்டம் ஆகிய பகுதிகளில் குடிநீரின் தரம் தொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி RO குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.