Times of Puducherry

விழுப்புரம் அருகே அரசு பள்ளியை சூழ்ந்த மழை வெள்ளம் - சேற்றில் நடந்து செல்லும் பிஞ்சு குழந்தைகள்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
18 Sep 2026 • 1:19 PM
rain drainage issues

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் மேலக்கொந்தை கிராமத்தில் உள்ள ஆர்.சி தொடக்கப்பள்ளியில் பெய்த கனமழையால் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காணப்படுகிறது. மழை வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் பிஞ்சு குழந்தைகள் சேற்றில் நடந்து பள்ளிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்றவும், வரும் காலங்களில் நீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் அமைக்கவும் பள்ளி நிர்வாகமும், ஊராட்சி மன்ற நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top