Times of Puducherry

நடிகை அம்பிகா மற்றும் அவரது தம்பி மல்லிகார்ஜுன் மீது ரூபாய் 46 கோடி செக்கு மோசடி செய்ததாக நடிகை ராதா புகார்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 6:01 PM
radha- cheque

ரூபாய் 46 கோடி காசோலை மூலம் மோசடி செய்ததாக அம்பிகா மீது நடிகை ராதா புகார் தெரிவித்துள்ளார. 1980 முதல் 90 வரை சுமார் பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள் அம்பிகா ராதா . அப்போது முன்னணி கதாநாயகர்களான ரஜினி கமல் சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுடன் கதாநாயகியாக நடித்தனர். இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது வக்கீலுடன் ராதா புகார் அளிக்க வந்தார். இந்த புகார் அடிப்படையில் பார்க்கும் பொழுது நடிகை ராதா மற்றும் அம்பிகாவிற்கு இடையே குடும்ப பிரச்சினை இருப்பதாக தெரிகிறது 46 கோடி ரூபாய் அந்த பணத்தை காசோலையாக முறைகேடாக பயன்படுத்தி அம்பிகா மற்றும் அவர் சகோதரர் மல்லிகா அர்ஜுன் ஆகியோர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் வக்கீல் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது . ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை இருந்தால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரிப்பது வழக்கம், அதன்படி இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏ ஆர் எஸ் கார்டன் என்று அழைக்கப்படும் இடத்தில் சினிமா சூட்டிங் அதிகமா நடந்து வந்தது.  இந்த சொத்து விற்பனைக்கு அல்ல என அங்கு விளம்பரப் பலகை போடப்பட்டுள்ளது.

இதனால் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அடிக்கடி ஷூட்டிங் எடுக்கும் அந்த இடம் அம்பிகாவுக்கு சொந்தமான இடம் என இருந்த நிலையில் ஏன் என்று தெரியவில்லை திடீரென அறிவிப்பு பலகை அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தான் நடிகை ராதாவுக்கும் அம்பிகாவிற்கும் இடம் சம்பந்தமாக சொத்து பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அம்பிகாவுடன் தொலைபேசியில் கேட்டபோது இந்த சொத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவே இது சம்பந்தமாக நான் எந்த கருத்தையும் கூற முடியாது என தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top