Times of Puducherry
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய ஜனநாயக கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பமனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த வசந்தி மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்திக் குமாரி ஆகிய இருவரும் தட்டஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இது குறித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக் குமாரி கூறும் போது தங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும் தேர்தல் பிரச்சாரத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.