Times of Puducherry

புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 5:02 PM
devotion

புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது கோவிந்தா , கோவிந்தா கோவிந்தா கோஷம் விண்ணை மூட்டும் அளவுக்கு பக்தர்கள் கோஷம் எழுப்பினர் . புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. இந்த மாதத்தில் பெருமாள் பக்தர்கள் விரதம் கடைப்பிடிப்பார்கள். பெருமாளை வழிபட்டால் சனிக்கிழமைகளில் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வுகிட்டும் என்பது நம்பிக்கை. புராட்டாசி மாத பிறப்பையொட்டி புதுவையில் உள்ள பெருமாள் கோவில்களில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று புதுவையில் உள்ள அனைத்து
பெருமாள் கோவில்கள் அதிகாலை நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கபட்டு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பா பாலித்தார். மாலை 5 மணிக்கு
பெருமாள் தங்க கவச திருவாபரண சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தொடர்ந்து 26-ந் தேதி 2-வது சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு பெருமாள் முத்தங்கி சேவையிலும், அடுத்த மாதம் (அக்டோபர்)
3-ந் தேதி 3-வது சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பெருமாள் திருமலை திருப்பதி திருவேங்கடமுடையான் சேவையும், 10-ந் தேதி 4-வது சனிக்கிழமை மாலை பெருமாள் பூவங்கி சேவையும், இரவு 7 மணிக்கு பெருமாள் உள்புறப்பாடும், 17-ந் தேதி 5-வது சனிக்கிழமை
பெருமாள் ராஜ அலங்கார சேவையும் நடக்கிறது.

இதேபோல் புதுவை செயிண்ட் தெரேஸ் வீதி அத்திஅனந்தரங்கநாதா கோவில், முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவில்,
முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவில், ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில், எம்.எஸ்.அக்ரஹாரம் வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், சாரம் கிருஷ்ணன் கோவில், மகாவீர் நகர் பெருமாள்கோவில், பாகூரில் புகழ்பெற்ற லட்சுமி நாராயண பெருமாள், மதிகிருஷ்ணாபுரம் பட்டாபி ராமர் கோவில், கிருமாம்பாக்கம் சீனுவாசபெருமாள் கோவில், திருபுவனை தென்கலை வரத ராஜ பெருமாள் கோவில்களில் முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top