Times of Puducherry

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா: மக்கள் உற்சாகம், வியாபாரமும் கலை கட்டி உள்ளது

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
13 Sep 2026 • 2:04 PM

நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள மார்க்கெட்டுகளில் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன இதனை ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்

மாதந்தோறும் இரண்டு முறை சதுர்த்தி திதி வந்தாலும் ஆவணி மாத வளர்பிறையில் வரக் கூடிய விநாயகரின் திரு அவதார தினத்தை விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். இந்த நாளில் விநாயகருக்கு விருப்பமான பொருட்களை படைத்து, அவரது மனம் மகிழும் படி வழிபாடு செய்ய வேண்டும். இந்த நாளில் விநாயகருக்கு படைக்கப்படும் அனைத்து பொருட்களும் 21 என்ற எண்ணிக்கையில் படைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி 21 வகையான பூக்கள் பழங்கள் மற்றும் இலைகள் ஆகியவை வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கலைக்கட்டியுள்ளது.

இதற்காக பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட்டுகளில் குவிந்து விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது அதன்படி,பழைய பேருந்து நிலையம், லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை, உப்பளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. பூஜைக்கு தேவையான அரளிப்பூ, செம்பருத்தி, மல்லிகை, முல்லை, சாமந்தி, தாமரை, உள்ளிட்ட பூக்களும்,வில்வ இலை, அருகம்புல், இலந்தை இலை, வன்னி இலை, ஊமத்தை இலை, உள்ளிட்ட இலை வகைகளும்..விளாம்பழம் வாழைப்பழம்,மாம்பழம், பலாப்பழம்,மாதுளம்பழம்,ஆப்பிள்,கொய்யாப்பழம்,சாத்துக்குடி பேரிக்காய், நாவல் பழம், பப்பாளி உள்ளிட்டு பழ வகைகளும் மார்க்கெட்டுகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன மேலும் விநாயகர் சிலைக்கு தேவையான குடைகள் அலங்கார பொருட்களும் அவுல், பொரிகடலை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி சென்று வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி வியாபாரமும் புதுச்சேரியில் கலை கட்டி உள்ளது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top