Times of Puducherry
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கோரி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்கள், த.வெ.க தலைமை அலுவலகத்தில் அமைச்சரும், த.வெ.க பொதுச் செயலாளருமான என்.ஆனந்தை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினர்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நேரு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரைச் சந்தித்து தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஆதரவு கோரினர். இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்து இருப்பதாக வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.