Times of Puducherry

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராதது ஏன்? ஒன்றிய அரசுக்கு எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. கேள்வி

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
13 Sep 2026 • 2:35 PM

தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். வாக்களித்தோருக்கு நன்றி சொல்லக்கூட ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு வரவில்லை. புதுச்சேரியில் தேர்தல் களத்தை உருவாக்கும்போது கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடித்தது. 13 தொகுதிகளில் நின்றோம். மீதியை கூட்டணிக்கு தந்தோம். கூட்டணி தர்மத்துக்கு அனைத்து தொகுதிகளிலும் வேலை செய்தோம். திமுக நின்ற தொகுதியில் ரணகளம் ஏற்பட்டது. அந்த புண் இன்னும் ஆறவில்லை. வெற்றி பெறவேண்டிய தொகுதிகளை விட்டுத் தந்தோம். நம்முடன் இருந்தோரே எதிரிகளாக இருந்தார்கள். திமுக தனியாக நின்றிருந்தால் 25 தொகுதிகளில் வென்றிருப்போம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தனியாக நிற்க அனுமதி கேட்டோம். கூட்டணி தர்மம் என்றார். தோல்வி என்றவுடன் ஓடி விட்டனர். 13ல் நின்று 5 தொகுதிகளில் வென்றோம். மு.க.ஸ்டாலின் அவர்கள் 40 நிமிடங்கள் பேசி 5 தொகுதிகளில் வென்றோம். புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் செய்து காட்டுவோம். நூறாண்டு வரலாறு கொண்டது திராவிட இயக்கம். காங்கிரசுக்கு முன்னோடியானது.

மொழிக்காக உயிரிழந்த இயக்க உறுப்பினர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். புதுச்சேரியில் எங்கேயும் விசில் சத்தம் இல்லை. புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். புதுவைக்கு மாநில அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை. தமிழர் என்பதால் 2 மாநிலங்களில் தமிழ் பேசுவோர் ஆட்சியில் இருப்பதால் மாநில அந்தஸ்து தர மறுக்கிறார்கள். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு போராட்டம் தொடங்குவோம் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்து போராட திமுக தயாராக இருக்கிறது. புதுச்சேரிக்கு ஒரு தொழிற்சாலை கூட கடந்த ஆட்சியில் வரவில்லை. போலி மருந்து ஊழலில் ஊரே நாறிவிட்டது. புதுச்சேரி வளர்ச்சி பெற செய்ய திமுகவால் மட்டுமே முடியும். ஆகவே திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்திய அளவில் பெறிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று ஜெத்ரட்சகன் பேசினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top