Times of Puducherry
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் சட்டப்பேரவையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) தொடங்கப்படும் என அறிவித்திருப்பது, அத்தொகுதியின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. நீண்ட காலமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளையும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் கொண்டுள்ள தட்டாஞ்சாவடி தொகுதி, சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாகும் நிலையில், தொழில்துறையில் மேலும் வேகமான வளர்ச்சியை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், புதிய தொழில் நிறுவனங்கள் வருவதற்கும், முதலீடுகள் அதிகரிப்பதற்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகுவதற்கும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் தட்டாஞ்சாவடி தொகுதி மட்டுமின்றி, புதுச்சேரியின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ரங்கசாமியின் தொலைநோக்கு சிந்தனையும், தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மக்கள் சேவகர் அசோக் ஆனந்தனின் மக்கள் பணியும் இணையும் நிலையில், தொகுதியின் வளர்ச்சிப் பயணம் புதிய வேகத்தை பெறுகிறது.
கல்வி, மருத்துவம், சாலை, குடிநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன், தொழில் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் மையமாகக் கொண்டு தட்டாஞ்சாவடி தொகுதியின் எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. தொகுதி மக்களின் தேவைகளை நேரில் கேட்டறிந்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் அசோக் ஆனந்தன், முதலமைச்சர் ரங்கசாமியின் வளர்ச்சித் திட்டங்களை தொகுதி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.
முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு, தட்டாஞ்சாவடி தொகுதியை தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளின் முக்கிய மையமாக மாற்றுவதற்கான அடித்தளமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. “தொழில் வளர்ச்சி – வேலைவாய்ப்பு பெருக்கம் – பொருளாதார முன்னேற்றம்” என்ற புதிய பாதையில் தட்டாஞ்சாவடி தொகுதி பயணிக்கத் தொடங்கியுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.