Times of Puducherry

புதுச்சேரியில் நடமாடும் ஆரம்ப மையம் (Mobile DEIC)

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
15 Sep 2026 • 2:14 PM

நடமாடும் ஆரம்ப மையம் (Mobile DEIC) ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு ஆரம்பகால தலையீட்டு மற்றும் சிகிச்சை சேவைகளை அருகாமையில் கொண்டு சேர்ப்பதே Mobile DEIC-ன் முக்கிய நோக்கமாகும். சத்யா சிறப்புப் பள்ளியின் ஒத்துழைப்புடன் தேவையுடைய குழந்தைகளுக்கான ஆரம்பகால தலையீடு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேச்சுப் பயிற்சி, சிறப்புக் கல்வி மற்றும் பிற ஆரம்பகால தலையீட்டு சேவைகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செவ்வேல், ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ஐயப்பன், இணை இயக்குனர் (தகவல் கல்வி தொடர்பு) மற்றும் RBSK மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் ரகுநாதன், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் அருள்விசாகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள குழந்தைகளுக்கு விரிவான ஆரம்பகால தலையீட்டு மற்றும் மறுவாழ்வு சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்வதில் இம்முயற்சி ஒரு முக்கிய முன்னேற்றமாக அமையும் .சிறப்பு குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக அமையும் என்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செவ்வேள் அறிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top