Times of Puducherry

புதுச்சேரியில் மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தனி அமர்வு அமைக்க கோரிக்கை - அமைச்சர் நமச்சிவாயம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
15 Sep 2026 • 6:57 PM

புதுச்சேரி உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்

ஆ. நமச்சிவாயம் இன்று புதுதில்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சந்தித்து, புதுச்சேரியில் மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தனி அமர்வை (High Court Bench) விரைவில் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினார். இந்தக் கோரிக்கையின் முக்கிய நோக்கம், புதுச்சேரி ஒன்றியப் பிரதேச மக்களுக்கு குறைந்த செலவில், விரைவான மற்றும் எளிதான முறையில் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகும் என்று அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் விளக்கினார். மேலும், புதுச்சேரியில் மதராஸ் உயர்நீதிமன்றத்தின் தனி அமர்வு அமைக்கப்படுவதன் மூலம், இப்பகுதியின் சட்ட மற்றும் நீதித்துறை கட்டமைப்பு மேலும் வலுப்பெறும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது வழக்குகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை குறைந்து, திறமையான, விரைவான மற்றும் சிக்கனமான முறையில் நீதியைப் பெற முடியும் என்றும் கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள், புதுச்சேரி அரசின் கோரிக்கையை விரைவாக பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களிடம் உறுதியளித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top