Times of Puducherry

அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறியிருக்கிறார் திருமாவளவன் -    பிரேமலதா

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
17 Sep 2026 • 11:20 AM
premalatha

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் இருக்கிறது. முதல்-அமைச்சர் அறிவித்த 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது யாருக்கும் எந்தவிதமான பயனும் அளிக்கவில்லை. மாற்றம் மாற்றம் என ஆட்சிக்கு வந்தார்கள். எந்தவிதமான மாற்றத்தையும் இந்த நிமிடம் வரை தமிழக மக்கள் பார்க்கவில்லை. திருமாவளவன் மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட திருமாவளவன், தற்போது தே.மு.தி.க.வுக்கு 10 சீட்டு கொடுத்ததால்தான் கூட்டணியைவிட்டு செல்கிறோம் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது எனக்காக திருமாவளவனும், கனிமொழியும் மட்டுமே பிரசாரம் செய்தனர். தற்போது ஒரு அமைச்சர் பதவி கிடைத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வேறொரு கூட்டணிக்கு திருமாவளவன் சென்றுவிட்டார்.

கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது போல, நீங்களும் வெளியில் இருந்து ஆதரவு அளித்திருக்கலாமே?. நீங்கள் ஒரு நிலைப்பாடு எடுத்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது தவறு. பல கட்சிகள் இருக்கும் நிலையில், தே.மு.தி.க. மீது மட்டும் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? தே.மு.தி.க.வை கண்டு என்ன பயம்? எங்களால்தான் நீங்கள் கூட்டணியை விட்டு சென்றீர்கள் என்பது உண்மைக்கு புறம்பான பதில் எனமக்களுக்கு தெரியும் என்று கூறினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top