Times of Puducherry

2 ஆண்டுகளாக சிறந்த யூனியன் பிரதேசம்: புதுச்சேரி முதல்வர் பெருமிதம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 7:43 AM
pollution control

நிர்வாகம், நிலையான வளர்ச்சி , சமத்துவம், நிலைத்தன்மை, மாசுக்கட்டுப்பாடு, திட மேலாண்மை என 1345 புள்ளிகள் எடுத்து இரண்டு ஆண்டாக சிறந்த யூனியன் பிரதேசம் என தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிர்வாகத்தை குறிக்கின்றன.

ஆய்வுக்காக மத்திய அரசின் தரவுகளைப் பயன்படுத்திய சிந்தனைக் குழு ஒரு கணக்கெடுப்பு செய்துள்ளது அந்த கணக்கெடுப்பில்
புதுச்சேரி பெங்களூரைச் சேர்ந்த இலாப நோக்கற்ற சிந்தனைக் குழுவான ‘பப்ளிக் அஃபையர்ஸ் சென்டர்’ (PAC) வெளியிட்ட ‘பப்ளிக் அஃபையர்ஸ் இன்டெக்ஸ்’ (PAI 2021) அறிக்கையின் ஆறாவது பதிப்பில், சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட யூனியன் பிரதேசமாகப் புதுச்சேரி உருவெடுத்துள்ளது.

பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் 1.345 புள்ளிகளைப் பெற்ற புதுச்சேரி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆறு யூனியன் பிரதேசங்களில், புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியன மட்டுமே நேர்மறையான புள்ளிகளைப் பெற்றன. மற்ற நான்கு பிரதேசங்களும் எதிர்மறையான புள்ளிகளையே பெற்றன.

நிலையான வளர்ச்சி பொதுவெளியில் கிடைக்கக்கூடிய மத்திய அரசின் தரவுகளை மட்டுமே பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தச் சுதந்திரமான மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆய்வானது, நிர்வாகச் செயல்பாடுகளை, நிலையான வளர்ச்சியானது சமத்துவம், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று தூண்கள், ஐந்து கருப்பொருள்கள், 14 நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் 43 குறியீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுக்கு நிர்வாகம் அளித்த பதிலையும் இந்தக் குறியீடு கணக்கில் எடுத்துக்கொண்டது. சமத்துவம், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் புதுச்சேரி முதலிடம் பிடித்ததை PAI வெப்ப வரைபடம் (heat map) காட்டுகிறது. கடந்த ஆண்டைப் போலவே புதுச்சேரி தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதைத் தொடர்ந்து தத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை உள்ளன. சண்டிகர் 5-வது இடத்திலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 6-வது இடத்திலும் பின்தங்கியுள்ளன.

அதிக நேர்மறைத் தொடர்பு குணகத்தைக் (positive correlation coefficient) கொண்டுள்ள புதுச்சேரி தரவரிசையில் முன்னிலை வகிக்கிறது
என்று அந்த அறிக்கை தெரிவித்தது. நிலைத்தன்மை அம்சத்தைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டுமானால், அவை மாசுபாட்டைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் ‘வாழ்க்கை எளிமையை’ (ease of living) உறுதி செய்ய வேண்டும் என்றும், திடக்கழிவு மேலாண்மை மூலம் தூய்மையைப் பேணும் விஷயத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top