Times of Puducherry

மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் வாழ்த்து பெற்றனர்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 5:27 PM
police-medal-villupuram

தமிழ்நாடு காவல்துறை பணியாளர்களுக்கான 65வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி திருநெல்வேலியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

அப்போட்டியில் விழுப்புரம் சரக காவல்துறை அலுவலகங்களில் இருந்து விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலக கண்காணிப்பாளர் விஜயராஜ் தலைமையில் விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டவர்களில், ஆண்கள் பிரிவில் விழுப்புரம் மாவட்ட அலுவலகத்தை சேர்ந்த கார்த்திகேயன், குமார், பெண்கள் பிரிவில் பரிமளா, இந்திரா மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் ஆகியோர் ஒரு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என ஏழு பதக்கங்களை வென்றனர்.

பரிசுப்பெற்றவர்கள் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அர.அருளரசு மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.மதிவாணன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top