Times of Puducherry
நடைபெறவுள்ள 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித்தேர்வகளும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்), ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. அனைத்து
தனித்தேர்வர்களும் 15.09.2026 (செவ்வாய்க்கிழமை) முதல் 30.09.2026 (புதன்கிழமை)-க்குள் கீழ்காணும் சேவை மையங்களுக்கு சென்று தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு சேவை ரெட்டியார்பாளையம், புதுச்சேரி மையம் இதற்கான விண்ணப்பப்படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்15.09.2026 முதல் 30.09.2026 வரை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல்கள் எடுத்து தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட சேவை மையத்திற்கு நேரில் சென்று ஒப்படைக்க வேண்டும்.
சேவை மையங்களில் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்று பின்னர் இத்துறையால் தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்களும், சேவை மையத்திற்கு (NODAL CENTRE) சென்று செய்முறைத் தேர்விற்கு பதிவு செய்ததற்கான ஒப்புகைச்சீட்டு மற்றும் முன்பு தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து Online-ல் பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை (HALL TICKET)
தேர்வர்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் பின்னர் அந்த மையத்தில் அறிவிக்கப்படும் நாட்களில் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80% வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2026-2027 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர் என்று பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி அறிவித்தார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.