Times of Puducherry

ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி 100 கிலோ பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 7:17 PM
panjavadi temple

மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி 100 கிலோ பழங்களால் அலங்கரிக்கப்பட்டு திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

புதுச்சேரி அடுத்த மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடீயில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினரால் வழங்கப்பட்டு பஞ்சவடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலவர் ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு, திருப்பதி திருமலையில் நடப்பது போன்று சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிக்கு ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, செவ்வாழை, சாத்துக்குடி, உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் கொண்டு 100 கிலோ பழங்களால் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்டு திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி போன்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதியை கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் செய்திருந்தது தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அறுசுவை விருந்தும் அளிக்கப்பட்டது.

இதே போன்று புதுச்சேரி முதலியார் பேட்டை ஸ்ரீ ஸ்ரீ வன்னிய பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு இந்திர சேவையில் எழுந்தருளிய ஸ்ரீ வன்னிய பெருமாள் பக்தர்களுக்கு அருள் அளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top