Times of Puducherry

அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் 20 000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
21 Sep 2026 • 4:52 PM
paddy- damage

விருத்தாசலம் அருகே மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து 20,000 மூட்டைகள் சேதம் விவசாயிகள் வேதனை.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மு.அகரம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மு. அகரம், முகாசபரூர், பட்டி, கோனான்குப்பம், எடச்சித்துர், கர்நத்தம், மங்கலம்பேட்டை, பூவனூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவைத்த குருவை நெல் அறுவடை செய்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.

அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் 20 000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

இந்த நிலையில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் கடந்த ஒரு மாதமாக முறையாக இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததால் தற்போது கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நெல்லை மீண்டும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றால் இதனை காய வைத்து உலர்த்தினாள் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் இதற்கு செலவு ஒரு ஏக்கருக்கு 5000 ரூபாய் ஆகும் நிலைமை ஏற்படுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் குடோனுக்கு எடுத்துச் செல்லாததால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. விவசாயிகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள் 20,000 ஆயிரம் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது இதற்குக் காரணம் அரசு அதிகாரிகள் அலட்சியப் போக்கு என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top