Times of Puducherry

அறிவிக்கப்படாத மின் வெட்டு, மீண்டும் மின் இணைப்பு கொடுப்பதில் தாமதம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 7:09 PM
nehru mla

கடந்த சில நாட்களாக கென்னடி நகர், சுப்பையா நகர், மகாலட்சுமி நகர், கண்ணன் நகர், திடீர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு 2 மணி நேரங்களில் திடீர் திடீர் என்று மின்தடை ஏற்படுகிறது. மீண்டும் மின் இணைப்பு கொடுப்பதற்கு காலை 10 முதல் 11 மணி வரை ஆகிறது. இதனால் பணிக்கு செல்பவர்களும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பெரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இது பற்றி அப்பகுதியில் மின் துறை இளநிலை பொறியாளரகலியபெருமாள் அவர்களிடம் கேட்டதற்கு மின்துறையில் போதிய ஆட்கள் இல்லை என்றும் இரவு நேரங்களில் பணி செய்வதற்கு ஊழியர்கள் வருவதில்லை என்றும் பொறுப்பற்ற பதில் அளித்து வந்தார்.

இதனை அறிந்த உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவருமான G.நேரு
இன்று மறைமலை அடிகள் சாலை பகுதியில் கென்னடி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுடன் மின்துறை உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் அவர்களுடன் இது பற்றி காரணத்தை கேட்டறிந்தார். மின்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top