Times of Puducherry
நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நவோதயா பள்ளி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் உட்கார்ந்து பேசி முடிவுக்கு வரவேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு விடாப்பிடியாக இருக்கிறது. இந்தி திணிப்பு மட்டும்தான் நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதற்கான காரணமாக இருக்க முடியாது.
இது நிலைப்பாடு சார்ந்த பிரச்சினை இல்லை; மாறாக அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இந்தியா கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கும் நாடு; ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனி கொள்கைகள் உண்டு என்று தரப்பில் விளக்கம் அளித்துள்ளது தமிழக அரசு.இந்தி திணிப்பு மட்டும் காரணம் அல்ல, நிதி சார்ந்த பிரச்சினைகளும் உள்ளன. மத்திய அரசு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் தர வேண்டியிருக்கிறது .
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான நிலங்களை கண்டறிய ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான நிலங்களை கண்டறிய மேலும் மூன்று மாத காலம் அவகாசம் உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.