Times of Puducherry
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்மு இவ்விருதை டாக்டர் அருண் பாபுவுக்கு வழங்கினார். மருத்துவக் கல்வி, சுகாதாரத் துறையில் புதுமையான முயற்சிகள் மற்றும் அடுத்த தலைமுறை மருத்துவ நிபுணர்களை உருவாக்குவதில் அவர் கொண்டுள்ள வாழ்நாள் முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் . அவர் ஜிப்மரில் தனது இளநிலை மருத்துவக் கல்வியான MBBS (1999–2004) படிப்பை முடித்ததைத் தொடர்ந்து, குழந்தைகள் நல மருத்துவத்தில் MD (2006–2009) முதுநிலை சிறப்புப் படிப்பையும் நிறைவு செய்தார். தற்போது, ஆந்திரப் பிரதேசம், மங்களகிரியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), குழந்தைகள் நலத் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக டாக்டர்அருண் பாபு பணியாற்றி வருகிறார்.
ஜிப்மரில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பயிற்சி ஆகிய இரண்டையும் நிறைவு செய்த ஒரு முன்னாள் மாணவர், நாட்டின் உயரிய ஆசிரியர் விருதைப் பெறும் நிலைக்கு உயர்ந்திருப்பது, இந்த வளாகத்தில் தொடர்ந்து பேணப்பட்டு வரும் உயர்தர கல்விச்
சிறப்பிற்கான சான்றாகும் தனது கல்விப் பணிக்காலம் முழுவதும், டாக்டர் அருண் பாபு சிறந்த கல்வித்தலைவராகவும் மருத்துவத் துறையில் புதுமைகளை உருவாக்கிய முன்னோடியாகவும் திகழ்ந்து
வருகிறார். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட Paediatrics for Medical Graduates மற்றும் TARGET Paediatrics உள்ளிட்ட 34 மருத்துவ நூல்களை அவர் எழுதியுள்ளார். இந்நூல்கள் உலகளவில் 2,30,000-க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ஆராய்ச்சியாளரான டாக்டர் அருண் பாபு, 110 ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு, 430-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வுப்பணிகள் உலகளவில் ஆயிரக்கணக்கான மேற்கோள்களைப் பெற்றுள்ளன. மருத்துவப் பயிற்சிமற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரண்டு முக்கிய மருத்துவசாதனங்களுக்கான காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். அவை, ‘புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான தலைப் பகுதி அல்ட்ராசவுண்ட் உருவகப்படுத்துதல் கருவி' (Neonatal Head Ultrasound Simulation Device) மற்றும் 'ஸ்டெதாஸ்கோப் பயன்படுத்த ஏதுவான தனிநபர் பாதுகாப்புஉபகரணம்' (Auscultation-Friendly PPE) ஆகும். கனடாவின் கல்கரி பல்கலைக்கழகத்தின் கம்மிங் மருத்துவப் பள்ளியில் இருந்து பெற்ற ‘நியோநேட்டல் பெரினேட்டல் மெடிசின்' (Neonatal Perinatal Medicine) பெல்லோஷிப் படிப்புஅவரது கல்வித் தகுதியை மேலும் உயர்த்துகிறது. தேசிய ஆசிரியர் விருது, இந்தியாவில் கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய
அங்கீகாரங்களில் ஒன்றாகும். கல்வியின் தரத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தி, மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.