Times of Puducherry
தமிழன்னை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில். நேயம் மக்கள் கழக தலைவரும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான G.நேரு(எ)குப்புசாமி வீடு வீடாக மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். மேலும் பொய்யாகுளம் பகுதி மக்களிடம் அவர் பேசுகையில்…பொய்யகுளம் பகுதியில் பல கட்சியினர் வந்து தங்களிடம், இங்கே வசிப்பதற்கு வீட்டு மனை பட்டா வாங்கித் தருகிறேன், வீடு கட்டித் தருகிறேன், இங்கு சாலை அமைத்து தருகிறேன் என்று பல்வேறு பொய் பிரச்சாரங்கள், பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருப்பார்கள். கடந்த காலங்களில் இவர்கள்தானே இங்கு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆட்சியாளர்களும் இருந்தார்கள் அப்போதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் மக்களே சிந்தியுங்கள் இந்த பொய்யாகுளம் பகுதி நீர்நிலை பகுதி ஆதலால் இங்கு மனைபட்டா வழங்குவது சாத்தியமில்லாத செய்தி ஆகும். இங்கு வசிக்கும் மக்களை முறைப்படி கணக்கெடுத்து, உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட திடீர் நகர் பகுதி ஏழை மக்களுக்கு வழங்கியது போல அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களே சிந்தியுங்கள் , நான் சொல்வதை செய்வேன் செய்வதை மட்டுமே சொல்வேன். உங்களுக்கு ஒரு சுகாதாரமான வாழ்விடம் உருவாக்கி தந்திட வாக்களியுங்கள் கை சின்னத்தில் என்று பேசினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.