Times of Puducherry

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
19 Sep 2026 • 6:25 PM
modi birthday

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சுமார் 500 தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பிஜேபி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் அவரது பிறந்தநாளை ஒரு மாதம் கொண்டாட புதுச்சேரி பிஜேபியினர் முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் புதுச்சேரி ராஜீவ் காந்தி குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு பிரட், பிஸ்கட் ஹெல்த் ட்ரிங்க்ஸ் உள்ளிட்ட சத்துணவு பெட்டகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தாய்மார்களுக்கு சத்துணவு பெட்டகங்களை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லக்ஷ்மி நாராயணன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top