Times of Puducherry
புதுச்சேரி இந்திரா காந்தி மைதானத்தை விளையாட்டு துறை அமைச்சர் GNS ராஜசேகரன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் ஹாக்கி மைதான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். புதுச்சேரியில் உப்பளம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் விளையாட்டு துறை அமைச்சர் GNS ராஜசேகரன் அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஓட்டப்பந்தய டிராக், கால்பந்து மைதானம் பகுதிகளில் உள்ள புதர்களை உடனே அகற்ற வேண்டும் என்றவர், தொடர்ந்து ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கினை பார்வையிட்டு அங்குள்ள விளையாட்டு வீரர்களின் தங்குமிடம், கழிவறை, குடிநீர் வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். தொடர்ந்து புனரமைக்கப்பட்டு வரும் ஹாக்கி மைதான பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்ட அமைச்சர், மைதான விடுதியில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறித்தார். தொடர்ந்து மைதானம் முழுவதும் உள்ள புதர்களை அகற்றி விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பாக பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.